14 மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர்கள் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கான அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். புதுப் பொலிவுடன் கூடியதாக, 'ஜெயலலிதா அணி'யைச் சேர்ந்தவர்களாகப் பார்த்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

வட சென்னை வடக்கு பிரேமா-தென் சென்னை வடக்கு சரஸ்வதி

வடசென்னை ஆர்.கே., நகர் பகுதி இணைச் செயலர் பிரேமா, தென்சென்னை சைதாப்பேட்டை பகுதி இணைச் செயலர் வத்சலா, திருவள்ளூர் புழல் ஒன்றிய மகளிர் அணி செயலர் பாத்திமா பீவி, வேலூர் பொதுக்குழு உறுப்பினர் பவானி கருணாகரன், திருப்பூர் பல்லடம் நகர மகளிர் அணி செயலர் சித்ராதேவி ஆகியோர், அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

வடசென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலராக பிரேமா, வடசென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலராக சாந்தி, தென்சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலராக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, தென்சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலராக வத்சலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் கிழக்குக்கு வாசுகி-மத்திக்கு கணிதா சம்பத்

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலராக வாசுகி, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலராக கணிதா சம்பத் எம்.எல்.ஏ ., காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலராக வசந்தா மணி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலராக சாந்தி, திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலராக பாத்திமா பீவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் புறநகருக்கு சுகன்யா-திருப்பூருக்கு ஜெகதாம்பாள்

வேலூர் மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலராக சுகன்யா மோகன்ராம், வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலராக பவானி கருணாகரன், திருப்பூர் மாவட்ட மகளிர் அணி செயலராக ஜெகதாம்பாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகருக்கு சித்ரா தேவி-நெல்லை புறநகர் வடக்குக்கு குமுதா

திருப்பூர் மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலராக சித்ராதேவி, அரியலூர் மாவட்ட மகளிர் அணி செயலராக ஜீவா அரங்கநாதன், பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி செயலராக ராஜேஸ்வரி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலராக ஜெயராணி, திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலராக குமுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் கூண்டோடு தூக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+