மாலத்தீவில் அதிகரிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதம்-கவலையில் இந்தியா!

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு மாலத்தீவில் இஸ்லாமிய அடிப்படைவாதம் கால்பதிக்கத் தொடங்கியது.
மும்பை தாக்குதலுக்கு காரணமான அமைப்பாக சொல்லப்படுகிற ஜமாத்-உத்-தவாவை இயக்கக் கூடிய கித்மாத்-இ-ஹல்க் என்ற அமைப்பு மாலத்தீவில் சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு மாலத்தீவு இளைஞர்களுக்கு லஸ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகள் ஆயுதப் பயிற்சிகளை வழங்கின.
2009ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் தொடர்புடைய அலி ஜலீல் மாலத்தீவைச் சேர்ந்தவர். இவர் அல்குவைதா இயக்கத்தில் இணைந்திருந்தார்.
2010-ம் ஆண்டில் தலிபான்கள் பதுங்கி இருக்கக் கூடிய பாகிஸ்தானின் வஜ்ரிஸ்தான் பகுதியில் 9 மாலத்தீவு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி அடித்தாற்போல் ஆனது. கைது செய்யப்பட்ட அனைவரும் அல் குவைதா மற்றும் தலிபான்களிடம் பயிற்சி பெற்றவர்கள்.
தற்போது பதவி விலகிய அதிபர் நஷீத்தும் கூட இந்தியாவுக்கான எச்சரிக்கையாக இஸ்லாமிய பயங்கரவாதத்தை தமது தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அண்மையில் மாலத்தீவில் சார்க் நாடுகளால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பல அரிய பொக்கிஷங்களை இஸ்லாமின் பெயரால் ஒரு குழுவினர் அடித்து நாசமாக்கினர். இதேபோல் மாலத்தீவு அருங்காட்சியகத்தில் இருந்த பெளத்த தூபிகளையும் சிதைத்தனர்.
மெல்ல மெல்ல வளர்ந்த இஸ்லாமிய அதிதீவிரவாதம் அரசியலிலும் நுழைந்தது. பதவி விலகிய நஷீத்தின் அரசாங்கத்திலும் இத்தகைய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தற்போதைய புதிய அதிபர் வகீத்தின் அரசாங்கத்திலும் இத்தகைய நபர்கள் இடம்பிடித்திருக்கின்றனர். தற்போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜலீல் அகமது அதிதீவிர இஸ்லாமிய சிந்தனையாளர் என்று கூறப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக மிக முக்கியமான நாடாக மாலத்தீவு இருந்து வருகிறது.
தற்போதைய அரசியல் மாற்றங்களில் இந்தியாவின் பங்களிப்பு இன்னமும் கூடுதலாக நேரடித் தலையீடாக இருந்திருக்க வேண்டும் என்பது சில அரசியல்பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீட்டுக்கு இந்தியா வழிகொடுத்துவிட்டு அமைதி காக்குமேயானால் பின்னாளில் பாகிஸ்தான் உளவு அமைப்பும் லஸ்கர் இ தொய்பா போன்றவையும் இந்தியா மீது தாக்குதல் நடத்த மாலத்தீவை பயன்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications