For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவத்துல மேடையிலிருந்து குதிச்சிடப் போறார் ராகுல்-முலாயம் மகன் கிண்டல்

Google Oneindia Tamil News

லக்னோ: ராகுல் காந்தி ரொம்ப கோபக்காரராக இருக்கிறார். ஒருமுறை கைகளை இறுகக் கட்டிக் கொண்டு பேசினார். பிறகு கையில் இருந்த பேப்பரை எடுத்துக் கிழித்துப் போடுகிறார். அடுத்தமுறை கோபத்தில் மேடையிலிருந்து குதித்து விடப் போகிறார் என்று முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் நக்கலடித்துள்ளார்.

லக்னோவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசுகையில்,கோபத்தில் தனது கையில் இருந்த பேப்பரை எடுத்துக் கிழித்துப் போட்டார். இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட விஜயகாந்த்தை எப்படி அவரது கோபச் செயல்களுக்காக வடிவேலு வாரினாரோ, அதே ரேஞ்சுக்கு ராகுல் காந்தியை உ.பி. தேர்தல் பிரசாரக் களத்தில் வாரத் தொடங்கி விட்டனர்.

சமாஜ்வாடிக் கட்சி எம்.பியும், முலாயம் சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் இதுகுறித்துக் கூறுகையில், படு கோபக்காரராக இருக்கிறார் ராகுல். ஒரு முறை என்னடாவென்றால் கோபத்தில் கைகளை இறுகக் கட்டிக் கொண்டார். இப்போது பேப்பரை எடுத்து கிழித்துப் போடுகிறார். அடுதத முறை மேடையிலிருந்து குதித்தாலும் குதிப்பார் போல என்று அவர் கூறவே அவரைச் சுற்றி இருந்தவர்கள் வாய் விட்டுச் சிரித்தனர்.

English summary
Let Rahul Gandhi's dramatic flourish yesterday become inspirational for young UP, Akhilesh Yadav of the Samajwadi Party would like to point out that tearing up paper on an election rally stage is an angry act. Yadav had more than a hint of a smile when he said today, "Rahul seems angry. Earlier he used to get angry by folding hands, then he got angry by tearing up paper. Who knows, next time he might jump off the stage in anger." Those around him laughed on cue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X