சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார்

சங்கரன்கோவில் தொகுதியில் மார்ச் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
தி.மு.க. சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு 41 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களிடம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேர்காணல் நடத்தினார்.
அவருடன், பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வேட்பாளர் அறிவிப்பு
ஒன்றரை மணி நேர நேர்காணலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கருணாநிதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தி.மு.க. தேர்தல் ஆட்சி மன்றக்குழு கூடி, நெல்லை மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள், சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்துள்ள கழக வேட்பாளர்கள் சார்பில் பரிந்துரைத்து வந்த கழக அமைப்புகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரிடமும் கலந்துபேசி, இறுதியாக எடுக்கப்பட்ட முடிவின்படி, சங்கரன்கோவில்
இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக வழக்கறிஞர் ஜெ.ஜவகர் சூரியகுமாரை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.
கழக தொண்டர்கள், தோழமை கட்சி தலைவர்கள் மற்றும் அதனை சார்ந்த செயல்வீரர்கள் அனைவரும் கழக வேட்பாளரான ஜவகர் சூரியகுமாரை இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலத்தின் உறவினர்
ஜவகர் சூரியகுமார் (வயது 41) எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர்.
வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை பெயர் ஜேம்ஸ்.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் தம்பி மகன் ஆவார்.
இவரது மனைவி பெயர் வாசுகி. இவருக்கு, ஜனனி என்ற மகளும், அருண் என்ற மகனும் உள்ளனர்.
சங்கரன்கோவில் நகர தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை செயலாளராக உள்ளார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications