கொலை மிரட்டல் வழக்கு: கே.என். நேருவைப் பிடிக்க 6 தனிப்படை அமைப்பு

கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் குற்றாலம் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கல்யாணத்தை சந்திக்க முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், திருச்சி நகர செயலாளர் அன்பழகன் உள்பட பலர் நேற்று காரில் திருச்சி மத்திய சிறைக்கு சென்றனர். அங்கு காரை சிறை வளாகத்திற்குள் அனுமதிப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்தது.
அப்போது சிறைக் காவலர் வீரமணயை காரில் சென்றவர்கள் பணியை செய்யவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகின்றது. இது குறித்து வீரமணி கே.கே. நகர் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் கே.என்.நேரு, பூண்டி கலைவாணன், அவரது உதவியாளர் செல்வராஜ், அன்பழகன் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று மாலை பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டார். திருச்சி தில்லை நகரில் உள்ள நேருவின் வீடு, அவரது உறவினர்களின் வீடுகள், லால்குடியிலுள்ள மில், காணக்கினிய நல்லூரிலுள்ள வீடு ஆகிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தியும் நேரு கிடைக்கவில்லை. ஆனால் சிறைக்கு செல்ல பயன்படுத்தப்பட்ட கார் கிடைத்தது. உடனே அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications