For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுப் பொலிவுடன் நரேந்திர மோடி இணையதளம்!

Google Oneindia Tamil News

Narendra Modi
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் இணையதளம் புத்தம் புதுப் பொலிவுடன் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது.

இணையதளம் முழுமையாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய சிறப்பம்சங்கள் கூடுதலாக இணைந்துள்ளன. பல புதிய விஷயங்களும் சேர்ந்துள்ளன. முன்பை விட படு பளிச்சென இணையதளம் காட்சியளிக்கிறது.

நரேந்திர மோடியின் வரலாறு முதல் குஜராத் குறித்த லேட்டஸ்ட் செய்தி வரை பல தகவல்கள் இதில் பொதிந்து கிடக்கின்றன. குஜராத் அரசின் முக்கியத் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களையும் இங்கு காணலாம்.

இந்த இணையதளத்தின் புதிய அம்சம் என்னவென்றால் ‘You Said It’ பகுதி ஆகும். இந்த இடத்தில் மக்கள் தங்களது கருத்துக்களை இங்கு பிரசுரிக்கலாம்.

மேலும் மீ்டியாக்களில் குஜராத் முதல்வர் குறித்தும், குஜராத் அரசின் திட்டங்கள் குறித்தும் வெளியான செய்திகளை, தங்களைக் கவர்ந்த செய்திகளை மக்களே பிரசுரிக்கும் வாய்ப்பை அளிக்கும் ‘Media Coverage’ என்ற பகுதியும் இந்த தளத்தில் உள்ளது. இது போக மீடியாக்களில் வரும் செய்திகள் அவ்வப்போது இந்த இணையதள நிர்வாகிகளே தொகுத்துத் தருவார்கள்.

மேலும் ‘Citizen Journalism’ பகுதியின் மூலம் மக்கள் தங்களது செய்திளை, கட்டுரைகளை இங்கு இடம் பெறச் செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களையும் இங்கு அப்லோட் செய்யலாம்.

இவை தவிர நரேந்திர மோடியின் புகைப்படங்கள், வீடியோக்கள், பேச்சுக்கள், வால்பேப்பர் டவுன்லோடுகள், ரிங்டோன்கள் ஆகிய பழைய பிரிவுகள் அப்படியே உள்ளன.

நரேந்திர மோடி எழுதிய நூல்களைப் படிக்க விரும்புவோரின் வசதிக்காக இ-புக் பிரிவு காத்திருக்கிறது. இங்கு வந்தால் மோடி எழுதிய புத்தகங்களை படித்து இன்புறலாம்.

நரேந்திர மோடிக்கு மோடிக்கு மக்கள் கடிதம் எழுதும் பகுதி இன்னொரு சிறப்பம்சமாகும். மேலும் அவரை தங்களது விழாக்களுக்கு அழைத்தும், சந்திக்க நேரம் கேட்டும் கூட இங்கு எழுதலாம். இது மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

நவீனத் தொழில்நுட்பத்தை உடனுக்குடன் தத்தெடுத்து அதை பயன்படுத்துவது என்பது நரேந்திர மோடியின் பாணியாகும். அதை இந்த புதுப் பொலிவுடன் கூடிய இணையதளம் சான்றாக காட்டுகிறது. தொழில்நுட்பத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவரான மோடி, தனது அரசின் செயல்பாட்டிலும் அன்றாடப் பணியிலும் கூட தொழில்நுட்பத்தை பெருமளவில் பயன்படுத்தி வருகிறார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த நிர்வாகத்தைக் கொடுப்பதற்காக பல விருதுகளையும் குஜராத் அரசும், முதல்வர் மோடியும் பெற்றுள்ளனர்.

மோடியின் சிறப்பான தொழில்நுட்ப பயன்பாட்டைப் பாராட்டும் வகையில் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய கம்ப்யூட்டர் கழகம், மோடிக்கு இ ரத்னா விருது வழங்கிப் பாராட்டியது நினைவிருக்கலாம்.

இணையதளத்தில் மட்டுமல்லாமல், சோஷியல் மீடியாவிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார் மோடி. தொடர்ந்து அவர் பிளாக்கில் எழுதி வருகிறார். தனது கருத்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொள்கிறார்.

நரேந்திர மோடியின் இணையதளம் புதுப் பொலிவுடன் வெளியாகியுள்ளதன் மூலம் மோடிக்கும், மக்களுக்கும் இடையிலான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்று நம்பலாம்.

English summary
Shri Narendra Modi’s website www.narendramodi.in has got a completely new look!. Apart from the earlier features, the website now has some very innovative features as well. Combined with Shri Modi’s active social media presence, this website will bring users & well wishers closer to Shri Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X