ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 11 ராணுவத்தினர் பலி

Subscribe to Oneindia Tamil

Avalanche
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 11 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

பந்திப்போரா மாவட்டத்தில் 8 பேரும் கந்தர்பால் மாவட்டத்தில் 3 பேரும் பனிச்சரிவில் புதையுண்டு போயுள்ளனர். கடந்த இரண்டுநாட்களாக காணாமல்போன 8 பேரும் பனிச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப். கர்னல் ப்ரார் கூறியதாவது:

பந்திப்போராவில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட பனிச்சரிவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காணாமல் போயுள்ளனர். 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

8 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கந்தர்பாலில் 3 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவத்தினருக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+