பயங்கரவாத தடுப்பு மையத்தை நிறுத்தி வையுங்கள்-பிரதமரிடம் மமதா நேரில் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உடன்பாடு எட்டும் ஏற்படும் வரையில் அந்த திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மாநில அரசுகளுடனான பேச்சுவார்த்தை முடியும் வரை தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் செயல்படாது என்று பிரதமர் எனக்கு உறுதியளித்துள்ளார். தற்போதுள்ளபடியே தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கப்பட்டால் அது கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும்.

அந்த மையத்தின் பெயரில் அவர்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், எந்த விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தலாம். இது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது ஆகும்.

இந்த விவகாரம் குறித்து மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+