அமெரிக்கா: உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை உயிர் பிழைப்பு

Subscribe to Oneindia Tamil

Boy survives being born with heart outside body
நியூயார்க்: அமெரிக்காவில் உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த ஆண் குழந்தை உயி்ர் பிழைத்துள்ளது. வழக்கமாக இது போன்று பிறக்கும் குழந்தைகள் ஒன்று இறந்து பிறக்கும், அல்லது பிறந்த 2 அல்லது 3 நாட்களில் இறந்துவிடும்.

அமெரிக்காவின் பென்னிசில்வேனியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ரயன் மார்கி்ஸ். அவன் பிறக்கையில் அவனுடயை இதயம் உடலுக்கு வெளியே இருந்தது. அவ்வாறு பிறந்த குழந்தைகளில் உயிர் பிழைத்தது ரயன் மட்டுமே என்கின்றனர் மருத்துவர்கள். ரயனின் தாயார் 12 மாத கர்ப்பமாக இருக்கையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் இதயத்தில் ஒரு பகுதி மட்டுமே வளர்வதால் கருவைக் கலைத்துவிடுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அந்த பெண் அதற்கு மறுத்துவிட்டார்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலை மீறி அவர் குழந்தை பெற்றுக் கொண்டார். ஆனால் குழந்தை பிறந்தபோது அதன் இதயம் உடலுக்கு வெளியே இருந்தது. அந்த குழந்தை பிழைக்காது என்று மருத்துவர்கள் எண்ணினர். ஆனால் ரயனுக்கு தற்போது வயது 3. இது போன்ற குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் ஒன்று இறந்து பிறக்கும், அல்லது பிறந்த 2,3 நாட்களில் இறந்துவிடும்.

ரயனின் இடப்பக்க இதயம் மட்டுமே முழுமையான வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த குறைபாட்டை எக்டோபியா கார்டிஸ் என்கின்றனர். கோடியில் ஒருவருக்கு தான் இநத் குறைபாடு இருக்குமாம். இந்த குறைபாடுடன் பிறந்தும் ரயன் உயிர் பிழைத்திருப்பது அதிசயம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இது குறித்து ரயனின் தாயார் கூறியதாவது,

மருத்துவர்கள் கருவைக் கலைக்கச் சொல்லியும் நாங்கள் மறுத்தோம். ரயன் பிறந்து உயிர் பிழைத்தால் அது அதிசயம் என்று தெரியும். இருப்பினும் அவனைக் கருவில் கலைக்க மனம் வரவில்லை. ரயன் போன்ற குறைபாடுடன் பிறந்த குழந்தைகளில் அவன் மட்டும் தான் உயிர் பிழைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவன் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளான் என்றார்.

ரயன் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் உள்ள சில்ட்ரன்ஸ் நேஷனல் மெடிக்கல் சென்டரில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தான். 30 மருத்துவர்கள் அடங்கிய குழு அவனது தாய்க்கு பிரசவம் பார்த்து என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+