போலி ஆவணம் மூலம் இலவச மின்சாரம் பெற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சுந்தர்ராஜன் எச்சரிக்கை
அருப்புக்கோட்டை: விசைத்தறி அமைப்பதாக கூறி போலி ஆவணம் மூலம் இலவச மின்சாரம் பெறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அருப்புக்கோட்டையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மத்திய, மாநில அரசுகள் இணைந்து, அருப்புக்கோட்டையில் கைத்தறி பூங்கா துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறி துறைக்கு சொந்தமான இடங்களை, தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அவை சட்டப்படி முறையாக கைப்பற்றப்படும்.
விசைத்தறி அமைப்பதாக கூறி போலி ஆவணங்கள் மூலம் இலவச மின்சாரம் பெறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளிவரும்.
கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக் கூடாது. தரக்கட்டுப்பட்டு அதிகாரிகள் சோதனை செய்யும் போது அதனை யாரும் தடுக்க முடியாது. கைத்தறி சங்கங்களுக்கு ரூ.1,500 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. இதனை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளர்கள் மட்டும் பயன் பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு திட்டம் முறைப்படுத்தப்படும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications