அமெரிக்காவில் இந்திய வியாபாரி மர்மநபர்களால் சுட்டுக் கொலை
நியுயார்க்: அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வியாபாரி ஒருவர், மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கடை நடத்தி வந்தவர் சுக்ரித் தாஸ்(48). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், நேற்றுமுன்தினம் வியாபாரம் முடித்து இரவு 10 மணியளவில் கடையை பூட்டி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சில மர்மநபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுக்ரித் தாஸின் வயிற்றில் குண்டு பாய்ந்து நிலைக்குலைந்து மயங்கி விழுந்தார். அப்போது அவரது கடையில் இருந்த பொருட்களை கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.
இந்த நிலையில் படுகாயமடைந்து கிடந்த சுக்ரித் தாஸ் அருகில் உள்ள கிரான்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார்.
சுக்ரித் தாஸின் கடையில் ஏற்கனவே 2 முறை கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications