அறிவியல் துறையில் சீனாவை விட இந்தியா பின் தங்கியுள்ளது: மன்மோகன்சிங்
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் "அறிவியல்" இதழுக்கு அளித்த பேட்டியில் மன்மோகன் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச அறிவியல் துறையில் இந்தியாவின் பங்களிப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் சீனா போன்ற நாடுகள் முந்திக் கொண்டுள்ளன" என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
இந்நிலையை மாற்ற 2017-ம் ஆண்டுக்காக அறிவியல்துறைக்கான ஒதுக்கீட்டை தற்போதைய ஒதுக்கீடை விட இரண்டு மடங்கு கூடுதலாக 8 பில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என்றும் மன்மோகன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை விட சீனா பலவிஷயங்களில் முந்திக் கொண்டிருக்கிறது என்பதை இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டிலும் கூட மன்மோகன்சிங் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications