அந்தோணியின் அருணாச்சல் பயணத்தால் எல்லைப் பிரச்சனையில் சிக்கலாம்: சொல்கிறது சீனா
பெய்ஜிங்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணியின் அருணாசலப் பிரதேச பயணத்தால் இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை சிக்கலாகியுள்ளது என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீனாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹோங் லீ கூறியதாவது:
சீனாவுடனான நட்பை இந்தியா அமைதியான முறையிலும், நிலைத்தன்மையுடன் பேணி காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா சீனாவுடனான எல்லைப்பிரச்னையை சிக்கலாக்கும் வகையில்நடந்து கொள்ளக்கூடாது என்றார்.
அருணாசலப்பிரதேசம் உதயமான நாள் விழாவில் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி கடந்த வாரம் பங்கேற்றிருந்தார்.
இது பற்றி செய்தியாளர்கள் ஹோங் லீயிடம் கேட்டபோது நேரடியாக அந்தோணியின் பெயரைக் குறிப்பிடாமல் எல்லைப் பிரச்சனையை சிக்கலாக்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங்கின் அருணாசலப் பிரதேச பயணத்தையும் சீனா எதிர்த்தது. இந்த விவகாரம் தொடர்பாக இருநாடுகளும் 15 சுற்றுப் பேச்சுகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications