ஜெயலலிதாவை உதயக்குமார் சந்தித்துப் பேச்சு-தீருமா சிக்கல்
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக மாநில அரசின் குழு தனது அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று தாக்கல் செய்து விட்ட நிலையில் இன்று முதல்வரை சந்தித்தார் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார்.
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்த மாநில அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் செவ்வாய்க்கிழமை வழங்கியது.
அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் இனியன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இனியன், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆவார். இதன் உறுப்பினர்களாக இந்திய அணுமின் கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீநிவாசன், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் அறிவு ஒளி, முன்னாள் தலைமைச் செயலாளர் விஜயராகவன் ஆகியோர் இடம் பிடித்தனர்.
இந்த் குழு சமீபத்தில் கூடங்குளம் சென்று ஆய்வு மேற்கொண்டது. போராட்டக்காரர்களையும் சந்தித்துப் பேசி கருத்தை வாங்கியது.
அதன் பின்னர் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனது அறிக்கையை குழு அளித்தது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அணு உலை எதிர்ப்புக் குழுத் தலைவர் உதயக்குமார் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
முன்னதாக இதுகுறித்து உதயக்குமார் கூறுகையில், திறந்த மனதுடன் முதல்வரைச் சந்திக்கச் செல்கிறோம். மக்களுக்கு ஆதரவான நிலையை முதல்வர் எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இனியன் குழு அறிக்கையில் என்ன உள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது. முதல்வரை சந்திக்கும்போது அதுகுறித்து தெரியலாம் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும் இனியன் குழு எங்களது மக்களை முழுமையாக சந்திக்கவில்லை.
முதல்வரைச் சந்தித்துப் பேசிய பின்னர் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்று கூறியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications