ராமேஸ்வரம் மீனவர்களுக்கு கெட்டுப்போன உணவு கொடுத்த இலங்கை கடற்படை: மீனவர்கள் புகார்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் தங்களுக்கு கெட்டுப்போன உணவைக் கொடுத்ததும் இல்லாமல் குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்று விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 25ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுககளி்ல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்த இலங்கை கடற்படை இருளாண்டி, சகாயம், ஜீவன்சன், பொன்னுசாமி ஆகியோருக்கு சொந்தமான 5 படகுகளையும், சீனிவாசன், ரமேஷ்குமார், முனியசாமி உள்ளிட்ட 22 மீனவர்களையும் பிடித்துச் சென்றது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால் அந்த 22 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
நேற்று ராமேஸ்வரம் வந்த 22 மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கை கடற்படையினர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த எங்களைப் பிடித்துக் கொண்டு தலைமன்னார் சென்றனர். பின்னர் அங்குள்ள காவல் நிலையத்தில் எங்களை ஒப்படைத்தனர். 26ம் தேதி விடுமுறை என்பதால் மறுநாள் எங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது எங்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அங்கு உணவு, உடை கொடுத்து உபசரித்தனர்.
இதையடுத்து நேற்று கடலோர காவல் படையினர் எங்களை இங்கு அழைத்து வந்தனர். அப்போது பசி என்று கேட்டதற்கு கெட்டுப்போன உணவைக் கொடுத்தனர். தாகத்திற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் அழைத்து வந்தனர். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications