சங்கரன்கோவில்: ரஜினி ரசிகர் மன்றம், கார்த்திக் கட்சியின் வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிப்பு!

சங்கரன்கோவிலில் வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 22ம் தேதி துவங்கி நேற்று முடிந்தது. மொத்தம் 40 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மாற்று வேட்பாளர்கள், மனு சரியில்லாத வேட்பாளர்கள் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி, திமுகவின் ஜவஹர் சூரியக்குமார், மதிமுகவின் சதன் திருமலைக்குமார், தேமுதிகவின் முத்துக்குமார் உள்பட 13 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 27 மனுக்கள் தள்ளுபடியாகின.
ஏற்கப்பட்ட 13 மனுக்களில் 7 பேர் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆவர். மற்ற 6 பேரும் சுயேச்சைகள்.
மனுக்களை வாபஸ் பெற வரும் 3ம் தேதி கடைசி நாளாகும்.
வேட்பு மனு ஏற்கப்பட்டோரின் விவரம்
முத்துச்செல்வி -அதிமுக, ஜவஹர் சூரியக்குமார்-திமுக, சதன் திருமலைக்குமார்-மதிமுக, முத்துக்குமார்-தேமுதிக, நாகேஸ்வரரா ராவ்-சமாஜ்வாடி, அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி-கணேசன், பாஜக-முருகன்.
சுயேச்சைகள் - ஆறுமுகம், வெள்ளைத்துரை, அய்யனு, பெருமாள், உடையார், சங்கர்.
நிராகரிக்கப்பட்ட 'விஐபிக்கள்'
நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் சுப்புலட்சுமி, ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ராஜபாளையம் மன்மதன், தேர்தல் மன்னன் பத்மராஜன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications