பாகிஸ்தான் உளவு அமைப்புடன் நெருங்கும் மாவோயிஸ்டுகள்?

தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்து இந்தியாவில் நாசவேலைகளை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிகழ்த்தி வருகிறது, தற்போது மாவோயிஸ்டு தீவிரவாதிகளுடனும் ஐ.எஸ்.ஐ. தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான உறுதியான ஆதாரங்களுடன் உளவுத்துறையின் ரகசிய அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
ஐ.எஸ்.ஐ.க்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்ததில், உல்பா தீவிரவாத இயக்க தளபதி பரேஷ் பருவா முக்கிய பங்கு வகித்துள்ளார். நேரடி தொடர்பு ஏற்பட்டவுடன், மாவோயிஸ்டுகளுக்கு நிதி உதவி அளிக்க ஐ.எஸ்.ஐ. முன்வந்தது.
ஆனால், நிதி உதவியை மாவோயிஸ்டுகள் ஏற்க மறுத்து விட்டனர். தங்களிடம் ஏற்கனவே பணம் குவிந்து கிடப்பதாக கூறிய அவர்கள், அதற்கு பதிலாக ஆர்.டி.எக்ஸ், டைம்பாம் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், தங்கள் இயக்க தளபதிகளுக்கு அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்த பயிற்சி அளிக்குமாறு வலியுறுத்தினர்.
மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு கே.எல்.ஓ. என்ற மற்றொரு வடகிழக்கு மாநில தீவிரவாத இயக்கம் மூலமாக உல்பா' ஆயுத சப்ளை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
வங்காளதேசத்தில் ஐ.எஸ்.ஐ. உளவாளியாக முகமது அஸ்லம் என்பவர் செயல்பட்டு வருகிறார். அவரை இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டு மேலிட தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு ஐ.எஸ்.ஐ. உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாவோயிஸ்டுகளை பயன்படுத்தி, கடலோரத்தில் அமைந்துள்ள உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டுள்ளது,
இந்த அறிக்கையை தொடர்ந்து, இந்திய-மியான்மர் எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினரை மத்திய உளவு அமைப்புகள் உஷார்படுத்தி உள்ளன. ஏனென்றால், மியான்மர்-சீனா எல்லையை ஒட்டி உள்ள உல்பா தீவிரவாத முகாம்களுக்கு மாவோயிஸ்டு இயக்க தலைவர்கள் செல்ல வாய்ப்புள்ளது. கடந்த காலங்களிலும் அவர்கள் இதேபோன்று ஆயுதங்கள் வாங்குவதற்காக நேபாளம் மற்றும் வங்காளதேசத்துக்கு சென்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications