சிங்களர்களை தண்டிக்க ஜெனீவாவில் தமிழர்கள் திரள வேண்டும்: வைகோ
சென்னை: தமிழினத்தை படுகொலை செய்த சிங்களரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஜெனீவாவில் தமிழர்கள் திரள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ் மக்கள் ஜெனீவாவில் பேரணி நடத்துகிறார்கள். தாயகம் விடுதலைக்காக மாவீரர்கள் சிந்திய ரத்தம், உயிருக்கு பூபாளம் இசைக்கட்டும், ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் நீதியின் குரல் வெல்லட்டும், ஜெனீவா நகரில் பொங்குமாங் கடலாய் தமிழர் திரண்டு அகிலத்தின் செவியெல்லாம் கேட்க எழுப்ப இருக்கும் விடியல் அது.
தமிழினப் படுகொலை செய்த சிங்கள இனவாத அரசை சர்தேச நீதிமன்ற கூண்டில் நிறுத்தி தண்டிக்க ஐ.நா. மன்றம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிங்கள சிறையில் அடைபட்டு கிடக்கும் தமிழர்கள் உனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழர் தாயத்தில் இருந்து சிங்கள ராணுவமும், போலீசும் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்ற கேரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடக்கிறது.
எட்டுத் திசைகளில் இருந்தும் ஈழத்திற்கு கட்டியம் கூற ஜெனீவாவிற்க்கு செல்லுங்கள், ஜெனீவாவில் வீர முழக்கம் மனித குலத்தின் மனசாட்சி கதவை ஓங்கி தட்டப் போகிறது. துடிக்க துடிக்க தமிழினத்தை படுகொலை செய்த சிங்களரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம். சுதந்திர தமிழ் ஈழ விடுதலை கொடியை ஏற்றுவோம் என்று கூறியுள்ளார் வைகோ.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications