இடைத்தேர்தலுக்குப் பின் அமைச்சர்கள் பதவி தப்புமா?- அழகிரி கிண்டல்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிவுக்கு பின் 32 அமைச்சர்கள் இன்னாள் அமைச்சர்களா..?முன்னாள் அமைச்சர்களா...? என்பது தெரியும் என மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சரும், தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளருமான அழகிரி ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்திற்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், " சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பிரசாரம் திருப்தி அளிக்கிறது. சென்னையில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கூறியது போல் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பணியாற்ற தமிழகத்தில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழுவினர் பிரசாரத்திற்கு வந்துள்ளனர்.
தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 15ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி சங்கரன்கோவில் வருகிறார். 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை பிரசாரத்திற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் வருகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வரும் 8ம் தேதி பிரசாரத்திற்கு வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோரும் பிரசாரத்திற்கு வருகின்றனர். மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் பிரசாரத்திற்கு அழைத்துள்ளோம். எங்கள் வேட்பாளார் ஜவகர் சூரியகுமார் நிச்சயம் வெற்றி பெறுவார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள 32 அமைச்சர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு இன்னாள் அமைச்சர்களா, முன்னாள் அமைச்சர்களா என்பது தெரியவரும்," என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications