மலேசியாவுக்கு ரூ.1.35 கோடி மதிப்பில் போதைப் பொருள் கடத்த முயற்சி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்த முயன்ற 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலையில் மலேசியா செல்லும் ஏர்-ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்தப்பட உள்ளதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஏர்-ஏசியா விமானத்தில் புறப்பட தயாராக இருந்த பயணிகளின் உடமைகளை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் வரிசையில் நின்ற 2 பெண்கள் உட்பட 3 பேரின் பைகளை ஸ்கேன் எந்திரத்தில் பரிசோதித்தனர். அப்போது 3 பேரின் பைகளில் சந்தேகத்திற்கு இடமான மரப்பெட்டிகள் இருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த வான் நுண்ணறிவு பிரிவினரும், சுங்க இலாகா அதிகாரிகளும் விரைந்து வந்து சந்தேகத்திற்கு இடமான பெட்டிகளை திறந்து பார்த்தனர். அதில் சுமார் 13.2 கிலோ எபிடரின் என்ற போதைப் பொருள் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.1 கோடியே 35 லட்சம் ஆகும்.

இதனையடுத்து போதைப்பொருளை கடத்த முயன்ற புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை சேர்ந்த முகமது குவியன்(37), சென்னை வியார்பாடியை சேர்ந்த லட்சுமி(35), மலர்விழி(36) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இது குறித்து 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+