நாமக்கல் அருகே நடந்த கோர விபத்தில் கல்யாணக் கோஷ்டியைச் சேர்ந்த 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமூர்த்தி என்வரின் குடும்பத்தினர் 9 பேர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் திருமணத்திற்காக இன்று காலை காரில் சென்றனர்.
நல்லிப்பாளையம் பைபாஸ் சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது திடீரென சாலையின் தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழந்தது. இதில் திருமூர்த்தி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications