அதிமுக பணபட்டுவாடா ஜோர்: டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிப்பு

சங்கரன்கோவிலில் வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஆரம்ப கட்டத்தில் மந்தமான நிலையில் பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக கடந்த 2 நாட்களாக சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில் ஆகிய 3 யூனியன்களில் சுமார் 85 பஞ்சாயத்துகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடைத்தேர்தல் அலுவலகங்களை திறந்துள்ளது.
இடைத்தேர்தல் அலுவலகத்தில் நிர்வாகிகளாக செயல்படுபவர்களில் கிளைக்கு தலா 13 பேர் வீதம் சுமார் 1500 பேருக்கு பணபட்டுவாடா படு ஜோராக வழங்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அதி்முக மேல்மட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் செழிப்பாக காணப்படுகின்றனர்.
சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட சேர்ந்தமரம், கடையாலூருட்டி, குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம், தேவர்குளம், கரிவலம்வந்தநல்லூர், திருவேங்கடம், குருவிகுளம், சங்கரன்கோவில் டவுன் ஆகிய பகுதிகளில் உள்ள 30 டாஸ்மாக் கடைகளில் கடந்த வாரம் வரை மதுபானங்கள் விற்பனை மந்தமாக இருந்தது. இந்நிலையில் கிராமப்புறங்களில் பணபட்டுவாடா ஜோராக செய்யப்பட்டதை அடுத்து சங்கரன்கோவில் தொகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கடந்த இரண்டு தினங்களாக மது விற்பனை அதிகரித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications