கர்நாடக பேரவையில் 3 அமைச்சர்கள் தவிர 15 எம்.எல்.ஏக்களும்
பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது செல்போனில் ஆபாசம் படம் பார்த்தது 3 அமைச்சர்கள் மட்டுமல்ல.. 15 எம்.எல்.ஏக்களும்தான் என தெரியவந்துள்ளது.
சட்டப்பேரவையில் சீன் படம் பார்த்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து பாரதீய ஜனதாவைச் சேர்ந்த அமைச்சர்கள் லட்சுமண் சபதி, சி.சி.பாட்டீல், கிருஷ்ண பாளேமர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக ஸ்ரீசைலப்பா பிதரூர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக இக்குழு பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்தியது.
இதை தொடர்ந்து குற்றச்சாட்டில் சிக்கிய 3 முன்னாள் அமைச்சர்களிடம் நேரில் விசாரணை நடத்த பேரவை குழு தீர்மானித்தது.
இதற்காக வருகிற 8-ந்தேதி ஆஜராகுமாறு 3 முன்னாள் அமைச்சர்களுக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே ஆபாச படத்தை மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் பார்த்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இது குறித்து பேரவை குழுவில் இடம் பெற்று இருக்கும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. நேரு செலேகர் கூறியுள்ளதாவது:
பேரவையில் 3 முன்னாள் அமைச்சர்கள் தவிர பாரதீய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படத்தை பார்த்துள்ளனர். இது எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எங்கள் கடமையை அரசியல் பாரபட்சமின்றி நிறை வேற்றுவோம். ஆபாசம் படம் பார்த்த எம்.எல்.ஏக்கள் பெயரை இப்போது வெளியிட மாட்டோம்.என்றார் அவர்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications