மனதை உருக்கிய வனக்காட்சி...இறந்த யானை உடலுக்கு காவல் நின்ற 10 யானைகள்!
கோவை: கோவையில் தோட்டம் ஒன்றில் இறந்து கிடந்த யானைக்கு 10 காட்டு யானைகள் காவலுக்கு நின்றன. இதையடுத்து பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டிய வனத்துறையினர் இறந்த யானையை அடக்கம் செய்தனர்.
கோவை மாவட்டம் ஆலாந்துறையை அடுத்த பூண்டிமடக்காடு கரியம்பதியில் ரங்கசாமி மிலிட்டரி தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போளூவாம்பட்டி வனச்சரக ரேஞ்சர் பார்த்திபன், பாரஸ்டர் ராமர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சுமார் சுமார் 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் வாயில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. பெண் யானை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் இறந்த யானையை சுற்றிலும் 10 காட்டு யானைகள் பிளறியபடி சோகத்துடன் நின்று கொண்டிருந்தன. இதனால் வனத்துறையினரால் இறந்த யானையை நெருங்க முடியவில்லை.
இதனையடுத்து பட்டாசுகள் வெடித்தும், சத்தம் எழுப்பியும் காவல் நின்ற யானைகளை வனத்துறையினர் விரட்ட முயன்றனர். ஆனால் காட்டில் சிறிது தூரத்திற்கு சென்ற அவை மேற்கொண்டு செல்ல மறுத்தன. இதனால் கோவை மாநகர வன அதிகாரி திருநாவுக்கரசு, பார்த்திபன், டாக்டர் மனோகரன் ஆகியோரின் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.
அதன்பிறகு இறந்த யானைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து அடக்கம் செய்தனர். யானையை அடக்கம் செய்யும் வரை காவல் நின்ற 10 யானைகளும் குறிப்பிட்ட தூரத்தில் நின்று பார்த்து கொண்டே இருந்தன. அதன்பிறகு அவை காட்டிற்கு சென்றுவிட்டன.
இறந்து போன ஒரு யானைக்காக 10 காட்டு யானைகள் காவல் நின்ற காட்சியை கண்ட வனத்துறையினர் விலங்குகள் இடையே உள்ள அன்பை கண்டு வியந்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications