• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் வளர்ச்சித் திட்டம் குறித்து ஐ.நா. சபை கூட்டத்தில் பேசும் குஷ்பு: 14ல் நைரோபி பயணம்

By Siva
|

Kushboo
சென்னை: நடிகை குஷ்பு பெண்கள் வளர்ச்சித் திட்டம் குறித்து நைரோபியில் நடக்கும் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அவர் வரும் 14ம் தேதி சென்னையில் இருந்து நைரோபி செல்கிறார்.

ஐ.நா. சபையின் இளைஞர் அமைப்பு சார்பில் கென்யா தலைநகர் நைரோபியில் கூட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 16,17 ஆகிய 2 தேதிகளில் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த கூட்டத்தில் இளைஞர்கள் நலன் பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு இளைஞர்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் பேசுகிறார். அதற்கான உரையையும் அவர் தயார் செய்துள்ளார். அவர் தனது உரையில் பெண்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வரும் 14ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நைரோபி செல்கிறார்.

 
 
 
English summary
Actress Kushboo is flying to Nairobi on march 14 to deliver a speech titled youth development at a meeting arranged by the UN. This meeting will be held on march 16 and 17 at the capital of Kenya.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X