சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு: இந்திய குடியரசு கட்சி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக இந்திய குடியரசு கட்சி அறிவித்துள்ளது.

இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று வேலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசன் கூறியதாவது,

தமிழகத்தில் அதிமுக அரசு மக்கள் நலப்பணிகளையும், நலத்திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இதனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றிப் பெற வாய்ப்புள்ளது.

அதிமுகவின் வெற்றிக்கு பணியாற்றும் வகையில் இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் சங்கரன்கோவிலில் ஒரு வாரம் அக்கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

தலித் மக்களின் நலனுக்காக அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்புகள் ஆகியவை முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது மத்திய அரசின் கடமை. பட்ஜெட்டுக்கு முன்பு நலிந்த மக்களின் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்து ஆலோசிக்க வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+