ரயில் கட்டணத்தை உயர்த்த எம்.பி.க்கள் கோரிக்கை!

இந்தியன் ரயில்வே கூட்டம் நேற்று நடந்தது. இதில் ரயில் கட்டணத்தை உயர்த்துமாறு லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் அடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடந்த 10 ஆண்டுகளில் எரிபொருள், மின்சாரம், ஸ்டீல், சிமெண்ட் மற்றும் ஊழியர்களின் ஊதியம் ஆகியவை பல மடங்கு உயர்ந்துள்ளதால் அதை சரிகட்ட ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டும். நல்ல வசதி உள்ள ரயில்களில் பாதுகாப்பாக பயணம் செய்ய பயணிகள் விரும்புகின்றனர். அதனால் கூடுதல் கட்டணம் கொடுக்க அவர்கள் தயங்கமாட்டார்கள். ரயில்வேத் துறை சந்தித்து வரும் இழப்புகளை சரிகட்ட இந்த கட்டண உயர்வு அவசியம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ரயில்வேத் துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி பலமுறை பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009-10ம் ஆண்டில் ரயில்வேத் துறைக்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மேலும் சில ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications