சங்கரன்கோவில்: அதிமுக வேட்பாளரும் வாக்காளர் காலில் விழ ஆரம்பித்தார்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில், திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரும், தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரும் வேட்பாளர்கள் காலில் விழுந்து ஆதரவு கேட்கின்றனர். அதிலும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் யாரைப் பார்த்தாலும் காலில் விழுந்து விடுகிறார்.
இதுவரை யார் காலிலும் விழாமல் இருந்த அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியும் தற்போது வாக்காளர்கள் காலில் விழ ஆரம்பித்துள்ளார். மற்றவர்கள் விழுகிறார்களே, நாம் மட்டும் விழாமல் இருக்கிறோமே, இதனால் வாக்குகள் வழி மாறிப் போய்டுமோ என்ற பயத்தால் அவரும் விழ ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
வன்னிகோனேந்தல் பகுதியில் மேசியாபுரம், அடைக்கலாபுரம், தேவர்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி தீவிர வாக்கு சேகரித்தார். அவருடன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், ராதாபுரம் யூனியன் தலைவர் ஜெகதீஸ், துணை தலைவர் லெரின்ஸ், கவுன்சிலர்கள் அருண்புனிதன், முருகன், சுப்பையா, பாலன், ஒன்றிய் பொருளாளர் துரைசாமி, ஊராட்சி செயலாளர்கள் இசக்கியப்பன், சந்திரன், சந்திரசேகர், கூடன்குளம் ஜெயலிலதா பேரவை செயலாளர் சுரேஷ்குமார், ஓட்டுனர் சங்க பொருளாளர் செல்வம், ஒன்றிய மாணவரணி தலைவர் பூமாலை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் செளந்திரராஜன், கணேசன், மாரியப்பன், நாட்டமை விஜய், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மகேஸ்வரன் உள்பட பலர் உடன் சென்றனர்.
அவ்வாறு வாக்கு சேகரிக்கச் சென்றபோது முத்துசெல்வி வாக்காளர்கள் காலில் விழுந்து ஆதரவு கேட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications