கேரளாவில் மீன்பிடி படகை இடித்த கப்பல் அதிகாரி கடலில் குதித்து தற்கொலை முயற்சி
சென்னை: கேரள கடல்பகுதியில் மீன்பிடி படகை இடித்த எம்.வி. பிரபுதயா சரக்கு கப்பலின் பாதுகாப்பு அதிகாரி கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை இலங்கை மீனவர்கள் காப்பாற்றிவிட்டனர்.
கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா துறைமுகத்தில் டான் என்ற படகில் 7 மீனவர்கள் கடந்த 1ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நள்ளிரவு நேரத்தில் சேர்த்தலா கடல் பகுதியில் மீன்பிடித்தபோது அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் அவர்களின் படகின்மீது மோதியது. இதில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் விழுந்தனர். அதில் 2 மீனவர்கள் கடலில் மூழ்கி பலியாகினர். 3 பேர் மாயமாகினர், 2 பேர் மட்டும் உயிருடன் கரை சேர்ந்தனர்.
விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் மீனவர்களால் கப்பலின் அடையாளத்தை கூற முடியவில்லை. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சிங்கப்பூரைச் சேர்ந்த டொனாலி கப்பல் நிறுவனத்தின் எம்.வி.பிரபுதயா என்ற சரக்கு கப்பல் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த கப்பலை விசாரணைக்காக சென்னை துறைமுகத்திற்கு வருமாறு இந்திய கடற்படை உத்தரவிட்டடது.
அதன்படி அந்த கப்பல் இலங்கையைச் சுற்றி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது விபத்து நடந்த சமயத்தில் கப்பலின் பாதுகாப்பு பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவர் கடலில் குதி்த்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அந்நேரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் அவரைக் காப்பாற்றி திரிகோணமலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தகவலை அந்த கப்பல் நிறுவனத்தின் பத்திரிக்கை செய்தியும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த கப்பல் நேற்று சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அதன் பின்னர் கடற்படை அதிகாரிகள் கப்பலை ஆய்வு செய்துவிட்டு மாலுமிகளிடம் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த கப்பல் தான் படகை இடித்தது என்பது தெரிய வந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications