இனியாவது மாநிலங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுமா காங்கிரஸ்?

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு கவுண்ட்டன் தொடங்கிவிட்டது என்று கூறுகிற அரசியல் ஆய்வாளர் பாஸ்கர ராவ். உத்தர்ப்பிரதேசத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் காங்கிரஸ் கட்சி என்கிறார்.
பல்வேறு மாநில மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளாமல் ஆட்சி செய்தாலும் பிரச்சாரம் மேற்கொண்டாலும் பெரும் தோல்வியையே சந்திக்க நேரிடும் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அனைத்துக் கட்சியினரும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா., இலங்கையுடனான உறவைப் பாதிக்காத வகையில் முடிவெடுப்போம் என்கிறோம். இத்தகைய மாநில மக்களின் உணர்வுகளுக்கு எதிரான போக்கே காங்கிரஸுக்கு அழிவை ஏற்படுத்தும் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம்போடுவதை அம்மாநில மக்கள் நன்கறிவார்கள். ஜெகன்மோகன் ரெட்டியின் புதிய கட்சி உதயமும் வேறு. இதனால் ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் முகாம் வெற்று கூடாரமாகிவிடக் கூடிய சூழல்தான்.
மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மாநில உரிமைகளுக்கான குரல் கொடுப்பதில் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் சளைத்துப் போகாது...துணிவோடு போராடக் கூடியது.
உத்தரப் பிரதேச மக்களோ தங்களது மனம்கவர்ந்தவர் "மெளலானா முலாயம்தான்" என நிரூபித்துவிட்டனர். 80 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கதாநாயகன் ராகுலுக்கு கிடைத்த "வரவேற்பு" நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்ப்லதை இப்போதே சொல்லிவிடும்!
ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்சனைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதனை நிறைவேற்றும் வகையில் காங்கிரஸ் இப்போதே செயல்படாவிட்டால் 2014 தேர்தல் முடிவின் போதும் "பாடம் கற்கிறோம்" என்றுதான் அம்மாவும் பிள்ளையும் (சோனியாவும் ராகுலும்) வாக்குமூலம் கொடுக்கவேண்டியதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications