விஷமாகிப் போனது ஹோலி பவுடர்! சிறுவன் பலி- 200 பேருக்கு தொடர் சிகிச்சை
மும்பை: மும்பை தாரவி பகுதியில் ஹோலி பவுடர் பூசியதால் பாதிக்கப்பட்டோரில் 13வயது சிறுவன் உயிரிழந்துவிட்டான். 200க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை தாராவியில் சாஸ்திரி நகர் பகுதியில் ஹோலி பண்டிகையை சிறுவர்கள் உற்சாகமாக கொண்டாடிவந்தனர். அப்போது திடீரென ஹோலி பவுடர் பூசிய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கமும் அலர்ஜியும் ஏற்பட்டது.
இதையடுத்து 200 பேர் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டனர். ஹோலி பவுடரில் கலந்திருந்த ரசாயனப் பொருளே இச்சம்பவத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரில் விகாஸ் வால்மீகி என்ற 13வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மராட்டிய முதல்வர் பிரித்விராஜ் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
ஹோலி பவுடரில் கலந்திருந்தது என்ன மாதிரியான ரசாயனப் பொருள் என்பது குறித்து காவல்துறையும் மருத்துவர்களும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.












Click it and Unblock the Notifications