Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக ஆட்சியில் 12 சதவீதமாக இருந்த கமிஷன் அதிமுக ஆட்சியில் 20 சதவீதமாக உயர்வு- வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko
சங்கரன்கோவில்: திமுக ஆட்சியில் காண்ட்ராக்ட்களுக்கு 12 சதவீதம் கமிஷன் பெற்றனர். அதிமுக ஆட்சியில் அது 15 முதல் 20 சதவீதமாக உயர்ந்துவிட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

சங்கரன்கோவிலில் மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமாரை ஆதரித்து வைகோ பிரச்சாரம் செய்து பேசுகையில், சங்கரன்கோவில் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. களத்தில் எல்லாக் குதிரைகளும் ஓடுகின்றன.

திருமங்கலம் இடைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்து தவறான ஒரு முன்னுதாரணத்தை திமுகவினர் ஏற்படுத்தினர். அதே போல் திருமங்கலம் பார்முலாவை சங்கரன்கோவில் தேர்தலிலும் புகுத்த அதிமுகவினர் நினைக்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இந்த தேர்தலில் பண பலத்தை முறியடிக்க வேண்டும். கோடி கோடியாக பணம் செலவழித்து வெற்றிபெறுவர்கள் மக்களுக்கு சேவை செய்ய மாட்டார்கள்.

திமுக ஆட்சியில் காண்ட்ராக்ட்களுக்கு 12 சதவீதம் கமிஷன் பெற்றனர். அதிமுக ஆட்சியில் அது 15 முதல் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் ஆற்றில் மணல் அள்ள முடியாது. இதனால் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரள மாநிலத்திற்கு மணல் கடத்தப்படுகிறது. இந்த மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுகிறது. இதே நிலை நீடித்தால், நம் இயற்கை வளங்களெல்லாம் அழிந்து தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்.

தமிழனுக்கு ஒரு துன்பம் என்றால் அதற்காக போராடுபவர்கள் மதிமுகவினர்தான். உலகத்தின் எந்த ஒரு மூலையில் தமிழனுக்கு பிரச்சனை என்றாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன்.

தேர்தல் அறிவித்தவுடன் 32 அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் முகாமிட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பு எந்த அமைச்சராவது வந்து மக்களிடம் குறை கேட்டார்களா? எந்த மக்களுக்காவது உதவி செய்துள்ளனரா? 16ம் தேதிக்கு பிறகு எந்த அமைச்சரும் சங்கரன்கோவிலில் இருக்க மாட்டார்கள்.

இந்த ஆட்சியில் பால், பஸ் கட்டணம், விலைவாசி என அனைத்தும் உயர்ந்துள்ளது. மின்வெட்டால் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மின்கட்டணம் உயரப் போகிறது.

இந்த ஆட்சிக்கு ஒரு எச்சரிக்கை செய்யுங்கள். மதிமுவுக்கு புதிய பாதையை உருவாக்க சமிக்ஞை காட்டுங்கள். அரசியலில் ஒரு திருப்பத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்த மதிமுகவுக்கு வாய்ப்பளியுங்கள்.

சட்டசபையில் அதிமுக, திமுக, தேமுதிகவுக்கு பிரதிநிதித்துவம் உள்ளது. மதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. வயிறு பசிக்கிறவர்களுக்குதான் சாப்பாடு போடவேண்டும். எங்களுக்கு சோறு (ஓட்டு) போடுகிற மக்களுக்கு எப்போதும் நன்றியோடு இருப்பேன். இந்த தேர்தலில் அதிமுக ஜெயித்தால் அவர்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவது இல்லை. ஏற்கனவே மெஜாரிட்டி இருக்கும் நிலையில் கூடுதலாக ஒருவர் ஜெயித்து ஆகப்போவது ஒன்றும் இல்லை. மதிமுகவை ஜெயிக்க வைத்தால் மக்கள் பிரச்னைகளுக்காக அவர் சட்டசபையில் குரல் கொடுப்பார்.

இந்தத் தேர்தலில் மதிமுகவை வெற்றிபெறச் செய்து அதிமுக அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கவேண்டும் என்றார் வைகோ.

அதிமுக கவுன்சிலர் மரணம்-பிரசாரத்தை நிறுத்திய வைகோ:

இந் நிலையில் சங்கரன்கோவில் நகராட்சி, 30வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஆறுமுகப்பாண்டியன் உடல் நலம் சரியில்லாமல் நேற்று இறந்தார். அவரது சொந்த ஊரில் நேற்று மாலை வைகோ பிரசாரம் செய்ய வந்தார். ஆறுமுகப்பாண்டியனின் உடல் வருவதைப் பார்த்த வைகோ பிரசாரத்தை நிறுத்திவிட்டு கிளம்பி விட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+