குஷ்பு Vs இல.கணேசன்: ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 2 பிரசாரம்-பாஜகவினர் கடும் எதிர்ப்பு

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து நடிகை குஷ்பு நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை அவர் சந்தித்தார்.
பிரசார வேனில் நின்றபடி தேவர்குளம் மெயின்ரோட்டில் இருந்து அவர் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். பிரசாரத்தில் குஷ்பு பேசுகையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவில் பகுதிக்கு சினிமா சூட்டிங்கிற்காக வந்தேன். அதன் பிறகு இப்போதுதான் சங்கரன்கோவில் பகுதிக்கு வந்து இருக்கிறேன். நான் சினிமா நடிகை என்ற முறையில் பிரசாரத்துக்கு வரவில்லை. திமுக தொண்டர்களில் ஒருத்தியாக உங்களிடம் வந்து உள்ளேன்.
பொதுவாக உயர் அதிகாரிகளுக்கு தங்கள் துறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள குறைந்தது ஒரு மாதமாவது ஆகும். அவர்கள் மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவதற்கு குறைந்தது 6 மாதமாவது செலவிட வேண்டும். ஆனால், 6 நாட்களுக்கு ஒருமுறை அதிகாரிகளை மாற்றுகிறார்கள்.
தேர்தல் வாக்குறுதியில் மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்குவோம் என்று தெரிவித்தார்கள். இதுவரை வழங்கியதாக தெரியவில்லை. காரணம் கேட்டால் தானே புயல் ஏற்பட்டதால் வழங்க முடியவில்லை என்கிறார்கள்.
சமீபத்தில் கூடங்குளம் பிரச்சினைக்காக அமைச்சரவை கூட்டப்பட்டதாக சொன்னார்கள். ஆனால் அந்த கூட்டத்தில் கூடங்குளம் விவகாரம் பற்றி பேசவில்லை, சங்கரன்கோவில் தொகுதியை பற்றித்தான் அனைவரும் பேசி உள்ளார்கள் என்றார்.
பின்னர் சங்கரன்கோவில் தேரடி திடலில் பிரசாரம் செய்ய இரவு 8 மணிக்கு குஷ்பு அங்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து சில கார்களும் வந்தன. அப்போது அங்கு பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன், தனது கட்சி வேட்பாளர் முருகனை ஆதரித்து அங்கு பேசிக்கொண்டு இருந்தார். ர்.
இந்த நிலையில், குஷ்புவும் அங்கு பேசத் தொடங்கினார். ஒரே இடத்தில் 2 பிரசாரங்கள் நடந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. குஷ்பு பேசத் தொடங்கியதும் இல.கணேசன் பேச்சை நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் குஷ்புவை கண்டித்தும், அனுமதி அளித்த போலீசாரை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் தேரடி திடல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இருந்தாலும் குஷ்பு தொடர்ந்து பேசிவிட்டே சென்றார்.
அவர் பேசுகையில், அதிமுக அரசு பதவியேற்று 10 மாதங்கள் ஆகியும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் திமுகவினரை பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது.
சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே, அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையே. தமிழக மக்கள் புத்திசாலிகளாச்சே. நாம இதுவரைக்கும் எதுவுமே செய்யவில்லையே என்ற பயம். இதனால் தான் அதிமுக அமைச்சர்கள் 32 பேர் சங்கரன்கோவிலில் முற்றுகையிட்டுள்ளனர்.
இதுதான் அதிமுகவின் ஒரே சாதனை. இந்த சாதனையைச் செய்ய யாராலும் முடியாது," என்றார் கிண்டலாக!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications