வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக வழங்க இருந்த திமுக கரை வேட்டிகள் பறிமுதல்!
சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 34 மூட்டை திமுக கட்சிக்கரை வேட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் வரும் 18 ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தொகுதி முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் அன்பளிப்பு அளித்து வருவதாக தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்கவும், அன்பளிப்பு வழங்குவதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், சங்கரன்கோவில் உள்ள நடராஜ விலாஸ் என்ற லாரி செட்டில் பறக்கும்படை தாசில்தார் உமா மகேஸ்வரி தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் லாரி செட்டில் இருந்த 34 மூட்டைகளை சோதனையிட்ட போது அதில் திமுக கட்சிக் கரையுடன் வேட்டிகள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், மதுரையில் இருந்து டிகேபி என்ற பெயரில் சங்கரன்கோவிலை சேர்ந்த ஆத்மாராவ் என்பவருக்கு வந்துள்ளதாக கண்டறிந்தனர்.
16 மூட்டைகள் எங்கே?
சங்கரன் கோவிலுக்கு லாரிகள் மூலம் 50 மூட்டைகள் வந்ததாகவும், இதில் 16 மூட்டைகள் மாயமாகிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதையடுத்து இந்த 34 மூட்டைகளையும் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து சங்கரன்கோவில் நகர காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications