சங்கரன்கோவிலை முற்றுகையிடும் தலைவர்கள்.. களைகட்டுகிறது இடைத்தேர்தல் திருவிழா!
சங்கரன்கோவில்: இடைத் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள இன்னும் 5 நாட்களே உள்ளதால் சங்கரன்கோவிலில் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தலைவர்கள் தொகுதியை முற்றுகையிட ஆரம்பித்துள்ளனர். இதனால் எங்கு பார்த்தாலும் இடைத் தேர்தல் பிரசாரமாக உள்ளது. போக்குவரத்து நெருக்கடியும் மக்களை சிரமப்படுத்த ஆரம்பித்துள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் 16ம் தேதி மாலை 5 மணியோடு முடிவடைகிறது. பிரசாரத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் சங்கரன்கோவிலில் மாநில தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் வாகனங்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தி்முக பொருளாளர் ஸ்டாலின் 12, 13, 14 ஆகிய தேதிகளில் சங்கரன்கோவில் தொகுதிகளில் தீவிர சூறாவளி பிரச்சாரம் செய்கிறார். திமுக தலைவர் கருணாநிதி 15ம் தேதி சங்கரன்கோவில் வடக்கு ரத வீதி, மற்றும் மேலரதவீதி சந்திப்பில் நடைபெறும் பொது கூட்டத்தில் பேசுகிறார். ஏற்பாடுகளை மத்திய அமைச்சரும், தென்மண்டல அமைப்பு செயலாளருமான அழகிரி, நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா வரும் 14ம் தேதி தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்வதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் அவர் பெங்களூர் கோர்ட்டில் ஆஜாராக வேண்டியுள்ளது. இதனால் அவர் அன்று வருவாரா அல்லது வேறு நாளில் வருவாரா என்று தெரியவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முதல் 15ம் தேதி வரை 6 நாட்கள் கிராமம் கிராமமாக சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்.
மதிமுக பொது செயலாளர் வைகோ, சமக தலைவர் சரத்குமார், ஆகியோர் சங்கரன்கோவில் தொகுதியிலேயே முகாமி்ட்டு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜ வேட்பாளரை ஆதரித்து பாஜ மாநில பொது செயலாளர் இல கணேசன் நேற்று முன்தினம் முதல் தொகுதியில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இப்படி எங்கு பார்த்தாலும் கட்சிகளின் பிரசாரம் களை கட்டி வருவதால் சங்கரன்கோவிலில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. இது மக்களை முகம் சுளிக்க வைப்பதாகவும் உள்ளது. எப்பப்பா தேர்தல் முடியும் என்று மக்கள் மருகிப் போய் கேட்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications