நாடாளுமன்றம் நாளை கூடுகிறது... இந்தமுறையும் பிரச்சினைகள் புயலைக் கிளப்பும்!

5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த தேர்தலில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன. வழக்கமாக ரயில்வே பட்ஜெட் மற்றும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும். எனினும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத் தொடர் 12ம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 16ம் தேதி பொது பட்ஜெட் தாக்கலாகிறது. அதற்கு முன்பாக 14ந் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கலாகிறது. இதன்படி நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் உரை நிகழ்த்த உள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டத் தொடர் நடைபெறுவதால் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன.
இந்த கூட்டத் தொடரின் போது கறுப்பு பண விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார். கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா மக்களவையில் தாக்கல் ஆனது. எனினும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. லோக்பால் குறித்த பிரச்சனையும் இந்த கூட்டத் தொடரில் எழுப்பப்படும் என தெரிகிறது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளும் இதில் விவாதிக்கப்பட உள்ளன. விலைவாசி உயர்வு குறித்து இடதுசாரிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இந்த முறை எதிர்க்கட்சிகளுடன் ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் இணைந்து செயல்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் பரபரப்பு நிலவுகிறது.
இதை விட பட்ஜெட்டில் என்ன சொல்லப் போகிறார்கள், ரயில் கட்டணம் அதிகமாகுமா என்ற மக்கள் எதிர்பார்ப்புதான் வழக்கம் போல கூடுதலாக உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications