சங்கரன்கோவில் பிரசாரத்தின்போது சரத்குமார் சொன்ன உளி கதை

கூட்டத்தில் சரத்குமார் பேசியது இதுதான்...
பெண்களின் வாழ்வில் வழிகாட்டி நமது முதல்வர். அதனால் தான் முத்துச்செல்வியை வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். முத்துச்செல்வி படித்தவர், பண்பாளர் அதனால் உங்களின் வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளித்து அமோக வெற்றியினை தாருங்கள்.
தாய்மார்களுக்காக தாலிக்கு தங்கம் தந்தவர் முதல்வர். குடும்பத்தில் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்து கறவைமாடுகள், ஆடுகள், விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் மற்றும் கல்வி பயிலும் மாணவ மாணவர்களை எப்படி உயர்த்த வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்து விலையில்லா லேப்டாப், விலையில்லா சைக்கிள் போன்றவற்றை வாரி கொடுத்துள்ளார்.
இப்படி தாய்மார்களும், மாணவர்களும் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து, தமிழக மக்களின் நலனில் அக்கரை கொண்டு இரவு பகல் பாராமல் அயராது உழைத்து தமிழ்நாட்டை முன்மாதிரியான மாநிலமாக மாற்றி வருகிறார். எனவே, தொலைநோக்குப் பார்வையுள்ள முதல்வரின் காலடியில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றியை நாம் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களுக்கு ஒரு கதையை இத் தருணத்தில் சொல்ல விரும்புகின்றேன்.
ஒரு சிற்பி ஒரு மலையை சின்ன உளியால் உடைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வழிப்போக்கன், அய்யா என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த சிற்பி சொன்னார். இந்த மலையை கடக்க மூன்று நாட்கள் ஆகிறது. அதனால் இந்த மலையை குடைந்து ரோடு போட்டால் அரை மணி நேரத்தில் அடுத்த ஊரை சென்றடையலாம் என்றார்.
அதற்கு வழிப்போக்கன் சொன்னான், இந்த பணி முடியும் தருவாயில் நீங்கள் உயிரோடு இருப்பீர்களா? இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்றான்.
சிற்பி சொன்னார், என் காலம் முடிவதைப் பற்றி கவலைப்படவில்லை. என் எதிர்கால சந்ததியினர் இதை அனுபவிக்க வேண்டும். பயனடைய வேண்டும் என்றார்.
அதைப் போல் தான் நம் முதல்வர் எதிர்காலத்தையும் எதிர்கால சந்ததியினரையும் பற்றி சிந்தனையோடு செயல்பட்டு வருகிறார். அவரை முதல்வராக பெற்றதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications