பலம் வாய்ந்த கட்சிகளுக்கு மத்தியில் நிராயுதபாணியாக போட்டியிடுகின்றோம்: வைகோ
மதுரை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் மத்தியில் நிராயுதபாணியாக போட்டியிடுகின்றோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பரவையில் மதிமுக நிர்வாகி இல்ல விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது,
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. அதைவிட தொண்டரின் திருமணம் முக்கியம் என்பதால் இங்கு வந்துள்ளேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் முழுமையாக இயங்கவில்லை. தேர்வுக்குப் படிக்க முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர். தடையில்லா மின்சாரம் கிடைக்க தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐந்து மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க உயிர்மூச்சு உள்ளவரை போராடுவேன். ஆனால் கேரள அரசு அணையை உடைக்க நினைக்கிறது. தமிழகமின்றி கேரளா வாழ முடியாது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலம் போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் மத்தியில் தொண்டர்களின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ள மதிமுக நிராயுதபாணியாக போட்டியிடுகிறது. தொகுதி மக்கள் எங்கள் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை பொய்த்துப் போகாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications