இடைத்தேர்தல்: சங்கரன்கோவிலில் கரை வேட்டி, துண்டு விற்பனை ஜோர்
சங்கரன்கோவில்: இடைத்தேர்தலை முன்னிட்டு சங்கரன்கோவில் தொகுதியில் கரை வேஷ்டி, துண்டு, கட்சிக் கொடிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
சங்கரன்கோவில் இடைதேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களும், நிர்வாகிகளும் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிக்கின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் கட்சித் தொண்டர்கள் சங்கரன்கோவிலுக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
பல கடைகளில் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. நகரில் எங்கு திரும்பினாலும் கரை வேஷ்டி துண்டுகளுடன் வலம் வரும் கட்சியினரே அதிக அளவில் கண்ணில் படுகின்றனர். இதனால் சங்கரன்கோவிலில் கரை வேஷ்டிகள், துண்டுகள், பனியன்கள், கட்சிக் கொடிகள், தொப்பி மற்றும் பேட்ஜ்கள் விற்பனை களை கட்டியுள்ளது. அனைத்து கட்சிகளின் துண்டுகளையும் வியாபாரிகள் கடைகளின் முன்பு தொங்க விட்டு தொண்டர்களை கவர்ந்திழுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications