மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் குறைந்துவிட்டன: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்
டெல்லி: ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் 2011-ம் ஆண்டில் மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் பெருமளவு குறைந்துவிட்டன என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
2010-ம் ஆண்டில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 625. 2011-ல் 465 சம்பவங்கள்தான் நிகழ்ந்துள்ளன.
ஒரிசாவில் 2010-ல் 218 சம்பவங்களும் 2011-ல் 192 சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
அதே நேரத்தில் ஜார்க்கண்ட்டில் கடந்த 2010-ம் ஆண்டைவிட கூடுதல் தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
பாலியல் வன்முறை மாவோயிஸ்டுகள்
ஒரிசா, மராட்டியம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களில் சரணடைந்த பெண் மாவோயிஸ்டுகள் தெரிவித்த தகவல்களின்படி, பெண் போராளிகல் மீதான பாலியல் வன்முறைகளை அதிகளவில் மாவோயிஸ்டு தலைவர்கள் நிகழ்த்துகின்றனர்.
ஒரிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் நக்சல்களின் மறைவிடங்களிலிருந்து கருத்தரிப்பு சோதனை உபகரணங்கள், ஆணுறைகள் கைப்பற்றப்பட்டது இதற்கு சாட்சியாகும்.
கருத்தரிக்கும் பெண் போராளிகளை கட்டாய கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கைகளிலும் மாவோயிஸ்டுகள் ஈடுபடுகின்றனர். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications