ஜெ. வழக்கில் சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவு செய்வது மார்ச் 21-க்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதை சிறப்பு நீதிமன்றம் வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜுனையா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பிறகு வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பு வழக்குரைஞர் மணிசங்கர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். சசிகலாவின் கண் சீராக இல்லை என்றும், அதனால் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும்,
மேலும் நீதிமன்ற வளாகத்தில் நிலைமை சரியாக இல்லை என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இதற்கு அரசு தரப்பு உதவி வழக்குரைஞர் சந்தேஷ் செளடா ஆட்சேபம் தெரிவித்தார். சசிகலா ஆஜராகாததால்தான் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. நீதிமன்றம் தன் கடமையை செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
மணிசங்கரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அடுத்த விசாரணையை இம் மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications