திருப்பதி கோயில் உண்டியலில் பணம், வெள்ளிப் பொருட்கள் திருடிய ஊழியர் கைது
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் இருந்து பணம், வெள்ளிப் பொருட்கள் திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் புகழ் பெற்றது. அங்கு தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் உண்டியலில் பணம், நகை, வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியலில் கிடைக்கும் பணம், பொருட்கள், நகை ஆகியவை தேவஸ்தான பாதுகாப்பில் உள்ள பெட்டகத்தில் வைக்கப்படும்.
உண்டியல் வசூலை கோவில் ஊழியர் கிரிதர் என்பவர் திருப்பதியில் உள்ள தேவஸ்தான பெட்டகத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது அவர் அமெரிக்க டாலர்கள், வெள்ளிப் பொருட்களைத் திருடி தனது ஆடையில் மறைத்து வைத்துக் கொண்டார். காணிக்கை வசூலை பெட்டக்த்தில் வைத்துவிட்டு வெளியே வந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர் அமெரிக்க டாலர்கள், வெள்ளிப் பொருட்கள் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் கிரிதரை கைது பணம், பொருட்களை மீட்டனர். இதையடுத்து அவரை தேவஸ்தான அதிகாரிகள் சஸ்பெண்டு செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications