ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்த அதிமுக- தேர்தலை தள்ளிவைக்க வைகோ கோரிக்கை

வைகோவின் அந்தக் கடிதம்:
சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்காக அ.தி.மு.க. 32 அமைச்சர்களை இடைத் தேர்தல் பணிக்கு அறிவித்தது.
அந்த அமைச்சர்களும் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னரும் தங்கள் இலாக்காக்களில் உள்ள சாதனங்களோடு தொகுதி முழுவதிலும் முகாமிட்டு தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளை மீறி வருகின்றனர்.
தமிழ்நாட் டிலுள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிர யோகத்தையோ, ஓட் டுக்குப் பணம் கொடுப்பதையோ தடுப்பதற்கான முன்னேற்பாடான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.
தொகுதி முழுவதிலும் கோடிக்கணக்கிலே பணம் தரப்பட்டு விட்டது. இந்த நிலையில் மார்ச் 18-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தால் தேர்தல் நியாயமானதாகவும், சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும் நடக்காது.
ஜனநாயகத்துக்கு எதிரானதாக அமையும். இந்தச் சூழ்நிலையில் நியாயமான தேர்தல் நடத்த சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலை பிந்திய தேதிக்கு ஒத்திவைக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையரை வேண்டிக் கொள்கிறேன்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிய கடித நகலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வேட்பாளர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் அனுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
