பதவி விலகவேண்டுமா? எழுத்துப்பூர்வமாக எழுதித் தர மமதா பானர்ஜிக்கு தினேஷ் திவேதி நிபந்தனை
டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து தினேஷ் திவேதியை நீக்க வேண்டும் என்பதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகவும் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக தினேஷ் திவேதியை தொடர்பு கொண்ட திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி உடனே பதவி விலகுமாறு அவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் தினேஷ் திவேதியோ புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். தம்மை பதவி விலகுமாறு மமதா பானர்ஜி எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் நிச்சயம் தாம் பதவி விலகுவதாக கல்யாண் பானர்ஜியிடம் உறுதியளித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய தினேஷ் திவேதி, என்னை பதவி விலகச் சொன்னால் அதனை முறைப்படி சொல்ல வேண்டும். அனேகமாக ஓரிரு நாட்களில் நான் பதவி விலகிவிடுவேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக தினேஷ் திவேதியை ஓரிருவாரங்களுக்கு தொடர்ந்து அமைச்சராக நீடிக்க விடுமாறு காங்கிரஸ் கட்சி, மமதாவை சமாதானப்படுத்த முயற்சித்துப் பார்த்தது. ஆனால் இந்த சமாதான முயற்சிகள் பலனளிக்கவில்லை. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பிரதமர் மன்மோகன்சிங் உரைக்குப் பின்னர் திவேதியை மாற்றலாம் என்றும் காங்கிரஸ் பேசிப் பார்த்தது.
ஆனாலும் பலனில்லை.
இதனிடையே தினேஷ் திவேதி விவகாரத்தில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவது என்று திரிணாமுல் காங்கிரஸ் முடிவெடுத்தால் மத்திய அரசை ஆதரிக்க சமாஜ்வாதி கட்சி தயாராக இருப்பதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications