மகா அமைதியாக முடிந்தது சங்கரன்கோயில் இடைத் தேர்தல் - 78 சதவீத வாக்குப் பதிவு!

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிடுகிறார்கள்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி, காலையிலேயே தனது வாக்கைப் பதிவு செய்தார். தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார், பா.ஜ.க. வேட்பாளர் முருகன், சமாஜ்வாடி கட்சி சார்பில் சயேட் சையாக போட்டியிடும் நாகேஸ்வரராவ், காந்திய சிந்தனையாளர் மன்றம் சார்பில் போட்டியிடும் ஆறுமுகம், இந்திய ஜனநாயக குடியரசு கட்சி கணேசன் ஆகிய 5 வேட்பாளர்களுக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் ஓட்டு இல்லை.
158 புகார்கள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.
கலிங்கப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட அவர் போது, அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே என நிருபர்கள் கேட்டதற்கு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்றார்.
மாலை 5 மணிக்குப் பிறகு வாக்களிக்க க்யூவில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒட்டுமொத்தமாக இந்தத் தொகுதியில் 78 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தொகுதியின் எந்தப் பகுதியிலும் சிறு சச்சரவு, கலாட்டா இல்லாமல் படு அமைதியாக நடந்து முடிந்தது தேர்தல்.
வாக்கு எண்ணிக்கை வரும் 21-ம் தேதி புதன்கிழமை நடக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications