சென்னை, டெல்லி ரயில் நிலையங்களில் தலையில்லா உடல்கள்: காதல் ஜோடியா?
சென்னை: டெல்லியி்ல் இருந்து சென்னை வந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த இரும்பு பெட்டியில் தலையில்லா ஆணின் உடல் இருந்தது. அந்த உடலைக் கைப்பற்றிய சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் இருந்து புறப்பட்ட கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை ரயில் நிலையத்திற்கு வந்தது. நேற்று காலை 7.15 மணியளவில் ரயிலை சுத்தம் செய்ய சென்ற பணியாளர்கள் 2.5 x 2.5 x 5 அடி இரும்பு பெட்டி கிடந்ததைப் பார்த்தனர். உடனே அவர்கள் இது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சென்ட்ரல் ரயில்வே நிலைய போலீசார் அங்கு வந்து பெட்டியைத் திறந்து பார்த்தனர். அப்போது அதில் கருப்பு நிற பாலிதின் பையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் தலையில்லா உடல் இருந்தது.
கொல்லப்பட்ட நபரின் தோள்களில் காயம் உள்ளது. அது அவரது தலையை வெட்டியபோது ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த உடலை ரயில் டெல்லியில் இருந்து கிளம்பியபோதே வைத்திருக்க வேண்டும். அந்த நபரின் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கவுள்ளோம் என்று துணை கமிஷனர் பொன்ராமு தெரிவித்தார்.
இதே போன்று தெற்கு டெல்லியின் சாராய் ரோஹில்லாவில் உள்ள இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு பையில் தலையில்லா பெண்ணின் உடல் இருந்தது. ஒரே நாளில் டெல்லி மற்றும் சென்னை ரயில் நிலையங்களில் தலையில்லா ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை அவர்கள் காதல் ஜோடிகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications