புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார் முகுல் ராய்
Subscribe to Oneindia Tamil

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்.பிக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். தற்போது ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள முகுல்ராய் மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சராக பதவி வகித்தவர்.












Click it and Unblock the Notifications