கூடங்குளத்தில் ஆகஸ்ட்டில் மின் உற்பத்தி துவங்கும்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அன்றே அணுமின் நிலையம் திறக்கப்பட்டு சுமார் 300 ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். நேற்று காலை ரஷ்ய விஞ்ஞானிகள் 100 பேர் உள்பட 950 பேர் பணிக்கு சென்றனர். இதையடுத்து இத்தனை நாட்களாக முடங்கிக் கிடந்த பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகின்றன. இரவு, பகலாக பணிகளை முடித்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் மின்உற்பத்தியை துவங்க இந்திய அணு சக்தி கழகம் திட்டமிட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குச் சாதகமான முடிவை தமிழக அரசு எடுத்ததையடுத்து கூடுதல் டிஜிபி ஜார்ஜ் தலைமையில், தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான போலீஸாரையும், 3 டி.ஐ.ஜி.க்கள், 10 எஸ்.பி.க்களையும் கொண்டு வந்து கூடங்குளத்தில் குவித்துள்ளனர்.
கூடங்குளத்தில் 144 போலீஸ் தடை உத்தரவும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். போராட்டக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவசுப்ரமணியன் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை கைது செய்ய சமயம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications