ரயில் கட்டண உயர்வு குறித்து மம்தா பானர்ஜிக்கு முன்பே தெரியும்?

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தை கி.மீக்கு 2 பைசா உயர்த்தினார் தினேஷ் திரிவேதி. உடனே, ஏழைகளுக்கு எதிராக தினேஷ் திரிவேதி செயல்பட்டுவிட்டார், ஐயோ.. ஏழைகள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்கவே முடியாது என்று கூறிக் கொண்டு தனது கட்சியைச் சேர்ந்த திரிவேதியை பதவி விலக வைத்தார் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி.
உடனடியாக, முகுல் ராயை நேற்று புதிய ரயில்வே அமைச்சராகவும் பதவியேற்க வைத்துவிட்டார்.
இந் நிலையில் பதவியைப் பறிகொடுத்த தினேஷ் திரிவேதி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பட்ஜெட் விவரங்களை நான் மம்தாவுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது உண்மை தான். ஆனால், அவருக்கு மிக நெருக்கமான அதிகாரியுடன் கட்டண உயர்வு விஷயம் குறித்துப் பேசினேன். அவர் மூலமாக மம்தாவுக்கு நிச்சயமாக கட்டண உயர்வு குறித்து முன்பே தெரிய வந்திருக்கும்.
அதே போல என்னை பதவி நீக்கியதற்கு கட்டண உயர்வு காரணமே இல்லை. முன்பே என்னை நீக்க முடிவு செய்துவிட்டார்கள். கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதும் அதைக் காரணம் காட்டி தூக்கிவிட்டார்கள்.
நான் ரயில்வேயை ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு அதிகாரியைப் போல நடத்தினேன். என்னைப் பொறுத்தவரை நான் யாருக்கும் தலைவணங்கவும் மாட்டேன். அது கூட நான் தூக்கப்பட ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.
இப்போது ரயில்வே அமைச்சராகியுள்ள முகுல் ராய், மம்தாவுக்கு தலையாட்டும் பொம்மையாக இருப்பார் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications