For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணுமின் நிலைய பணிகளை நிறுத்த போராடக்குழுவின் பிரம்மாஸ்திரம் சர்வதேச அணுசக்தி கழகம்

Google Oneindia Tamil News

வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த சர்வதேச அணுசக்தி கழகம் தான் போராட்டக்குழுவின் ஒரே நம்பிக்கையாக உள்ளது.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் சர்வதேச அணுசக்தி கழகம் உள்ளது. ஐ.நா. அமைப்பான அந்த கழகம் அணுசக்தியை தவறாக பயன்படுத்தும் நாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். அணு மின் நிலையங்களை அமைக்கும்போது அதை சுற்றி 30 கி்மீ தூரத்தில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும் என்று அது நிபந்தனை விதித்துள்ளது.

அதன் நிபந்தனைகளின்படி செயல்பட்டால் தான் அணு உலையில் யுரேனியத்தை நிரப்ப அனுமதியளித்து சான்றிதழ் கொடுக்கும். ஆனால் கூடங்குளம் அணு மின் நிலையம் சார்பாக அப்பகுதி மக்களுக்கு இதுவரை பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படவில்லை.

இது குறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், கூடங்குளம் அணு மின் நிலையம் திறப்பதற்கு முன்பு அதனை சுற்றியுள்ள 30 கிமீ தூரத்தில் உள்ள மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஆனால் பயிற்சி அளிக்கப்படாத நிலையில் அணு உலையை திறந்தால் இந்திய சட்டம், சர்வதேச கவுன்சில் ஆகியவற்றுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்காமல் அணு உலைகளில் எரிபொருள் நிரப்பக் கூடாது. இந்த குற்றத்தை மத்திய, மாநில அரசுகள் செய்யாது என்று நம்புகிறோம் என்றார்.

இதனால் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த சர்வதேச அணுசக்தி கழகம் தான் போராட்டக்குழுவின் ஒரே நம்பிக்கையாக உள்ளது.

English summary
IAEA is the only hope of protesters to stop the work at Kudankulam nuclear power plant. Since the people around the nuclear power plant are not given disaster management training, IAEA won't give permission to fill fuel in the reactors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X